கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
Published on

மேலப்பாளையம் போலீசார் குறிச்சி வாய்க்கால்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் ஜமாலி தைக்கா தெருவை சேர்ந்தவர் அப்துல்மஜிது மகன் முகமது யூசப் (வயது 30), சப்பாணி ஆலீம் தெருவை சேர்ந்த கபீர்முகமது மகன் முகமது யாசர் (25) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com