

சென்னை,
தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நாளை சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லு விக்ரமர்கா தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் கோவளத்தில் நாளை நடைபெறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.