தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com