தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் - வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிர், குறைந்தசபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com