பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க வாழைப்பழம் விநியோகம் செய்ய டெண்டர்!

இந்த ஒப்பந்தத்துக்கான முன்வைப்புத் தொகையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாமிர்தம்
Published on: 

பழனி,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்குத் தேவையான கற்பூரவள்ளி, குடகு மற்றும் மலைவாழைப்பழங்களை விநியோகம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன்படி, ஒப்பந்தம் பெறும் நிறுவனம் 2027-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வரை பஞ்சாமிர்தம் தயாரிப்புப் பிரிவுக்குத் தேவையான வாழைப்பழங்களைத் தொடர்ந்து விநியோகம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர்

இந்த ஒப்பந்தத்துக்கான முன்வைப்புத் தொகையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டரை சமர்ப்பிக்க நவம்பர் 26-ந்தேதி காலை 10 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.

இதற்கு முன்னதாக, நவம்பர் 17-ந்தேதி காலை 11 மணிக்கு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது.

டெண்டர் பெறும் நிறுவனங்கள் தரமான வாழைப்பழங்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விலையிலேயே வாழைப்பழங்களை வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com