

சென்னை,
அண்ணன் சீர் திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று (4-ம் தேதி) அண்ணன் சீர் திட்டத்திற்கு 2026-27ம் ஆண்டிற்கு 60,000 தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது. அதில், ஒரு தங்க நாணயம் 8 கிராம் எடையுடன் 22 கேரட் 916 ஹால்மார்க் தரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டுப் புடவையை பொறுத்தவரையில் சில்க் மார்க் மற்றும் ஹேண்டலும் மார்க் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்து டிசம்பர் இறுதிக்குள் இவற்றை கொள்முதல் செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.