

சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. விசாரணைக்குப்பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.