தென்காசி புத்தக திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பள்ளி மாணவர்கள்

தென்காசி புத்தக திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பள்ளி மாணவர்கள் சிக்கி தவித்தனர்.
தென்காசி புத்தக திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பள்ளி மாணவர்கள்
Published on

தென்காசி,

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் 3-வது பொதிகை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு இன்று சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து பேருந்துகள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை அனுமதித்ததால், புத்தக திருவிழா நடைபெறும் அரங்கில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால் மாணவர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். கூட்ட நெரிசலால் புத்தக திருவிழாவுக்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புத்தக திருவிழா நடைபெறும் அரங்கத்தில் போதிய காற்றோட்ட வசதிகளை செய்வதுடன், மாணவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கி அவர்களை முறைப்படி அனுமதிக்க வேண்டும் என புத்தக வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com