அ.தி.மு.க.வை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார்- தனியரசு

பன்னீர் செல்வம் இப்போதும் விட்டு கொடுத்து போனால் எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அ.தி.மு.க.வை வலிமை இழக்க செய்து விடும் என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறினார்.
அ.தி.மு.க.வை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார்- தனியரசு
Published on

சென்னை

ஓ.பன்னீர் செல்வத்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என்னுடைய ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான். ஓ.பன்னீர் செல்வம் . யாரையும் புறக்கணிக்காமல் அரவணைத்து செல்வார்.

யாரையும் அரவணைத்து செல்லாத ஜனநாயக பண்பற்ற மனிதராக எடப்பாடியை இப்போது எல்லோரும் பார்க்கின்றனர். ஓபன்னீர் செல்வம் இப்போதும் விட்டு கொடுத்து போனால் எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அ.தி.மு.க.வை வலிமை இழக்க செய்து விடும்.சில நிர்வாகிகள் தவிர்த்து, அ.தி.மு.கவின் தொண்டர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கவில்லை. அவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் தோல்வியே கிடைத்தது; மக்கள் செல்வாக்கு இல்லை.

ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைவார்கள். மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இபிஎஸ்-க்கு ஆதரவு. தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் "அ.தி.மு.க.வை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார்.விட்டுக்கொடுக்க கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினேன்.ஓபிஎஸ் தான் ஒற்றைத்தலைமையை ஏற்க வேண்டும்..இந்த முறை ஓ.பன்னீர் செல்வம் விட்டுத்தர போவதில்லை. அதில் அவர் உறுதியாக இருக்கிறார்" என கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com