தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய பச்சிளம் ஆண் குழந்தை சடலம் - போலீசார் விசாரணை

திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒதுங்கிய பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய பச்சிளம் ஆண் குழந்தை சடலம் - போலீசார் விசாரணை
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். ஆனால் அந்த குழந்தை யாருடையது? என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை யாரேனும் ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்தனரா? எப்படி குழந்தை இறந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்தால் முழு விவரம் தெரியும் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com