வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி: திருமாவளவன்

இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சரிடம் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு்(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது.

விசிக நன்றி

தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com