

சென்னை,
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் 9, 2026 அன்று சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யால் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தனது முதல் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.
தமிழகத்தில் இந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வது, பாதுகாக்கப்படக்கூடிய பகுதிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 58 பெண்கள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். 111 பாதுகாப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய நடவடிக்கையாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த 100 நாட்களில் 54 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு அவசர காலங்களில் விரைவான உதவி கிடைக்கும் வகையில் 1091 சிங்கப்பெண் உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த உதவி எண் 112 அவசர உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.