

மக்களவை எம்.பியும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை கைகளில் போட்டுக் கொண்டனர். பின்னர் டிடிவி தினகரனை கைகளில் போட்டுக் கொண்டனர். ஆனால், இவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். இதனையடுத்து, பாஜக பி மற்றும் சி திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்கின்றனர். பாஜகவைவிட்டு வெளியேறி, ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாக அண்ணாமலை செயல்படுகிறார். ஆனால், பேசுவதெல்லாம் பாஜகவின் பேச்சுதான்.
இது பாஜகவின் பி திட்டம்.தற்போது சி திட்டமாக, ஒரு நடிகரைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ஒருவர், தன்னுடைய ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சியில் இணையவிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, புதிய நடிகரின் கட்சி ஆகிய மூன்றும்தான் பாஜகவின் திட்டங்கள். இவர்களின் ரிமோட் கன்ட்ரோல் டெல்லியில்தான் இருக்கிறது. டெல்லியில் அமித் ஷாவிடம் இருந்து தொடங்கியுள்ள ஆபரேஷன் தான் இது. இதற்கு பெயர் ஆபரேஷன் D. தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம்.என்று கூறினார்.
நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். மாநிலம் முழுவதும் நற்பணி மன்ற நிர்வாகிகள் நியமனம், ரசிகர்கள் சந்திப்பு என தனுஷ் தீவிரம் காட்டி வரக்கூடிய நிலையில், மாணிக்கம் தாகூர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.