தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான் - முதலமைச்சர் பழனிசாமி

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான், நாளை நீங்களும் முதல்வராகலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்ககூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான், நாளை நீங்களும் முதல்வராகலாம். இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன; அது தவிடுபொடியாகிவிட்டது. உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கொரோனா காலத்திலும், புயல் பாதிப்பு காலத்திலும் மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com