அடுத்த 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களில் தமிழகம், புதுச்சேரியில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியாக குமரி பகுதியில் நிலவுகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 13%, புதுச்சேரியில் 1% சென்னையில் 44% குறைவாக பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com