அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இனி பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்..!

பெண்ணாடம் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிடம் ரெயில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம் ரெயில் நிலையம்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர்-கொல்லம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, 20635/20636 என்ற எண் கொண்ட அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெண்ணாடம் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 2-ந் தேதி முதல் அமல்

20635 சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் இரவு 11.23 மணிக்கு வந்து, 11.24 மணிக்கு புறப்படும். இந்த புதிய நிறுத்தம் 2.9.2026 முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், 20636 கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் காலை 1.07 மணிக்கு வந்து, 1.08 மணிக்கு புறப்படும். இந்த நிறுத்தம் 2.9.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் வசதிக்காக, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இந்த ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com