

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், பிரம்ம தேசத்தை சேர்ந்தவர் ஆர். முருகன் (35). இவர் நேற்று (சனிக்கிழமை) இரவு மண்ணிவாக்கம் சந்திப்பு அருகே உள்ள மேம்பாலத்தில் செல்லும் போது பின்னால் வந்த வேகமான கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோ டிரைவர் முருகன் தூக்கி வீசப்பட்டு 50 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் காரில் வந்த மாணவர்களை பிடித்து ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை எஸ்.கிரண் (20) என்ற மாணவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. மேலும் காரில் எஸ்.தர்ஷன் பிரசாத் (20), ஏ. நித்தின் (20), ஆஸ்டின் (20), சுனில் குமார் (20). ஆகியோர் சென்றுள்ளனர்.
விசாரணையில் மாணவர்கள் அனைவரும் சக நண்பரான கிரண் பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு வந்தது தெரியவந்தது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.