விஜய் தலைமையிலான சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் சராசரி வயது 56-லிருந்து 51-ஆக குறைவு

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.
விஜய் தலைமையிலான சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் சராசரி வயது 56-லிருந்து 51-ஆக குறைவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நேற்று கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் சராசரி வயது 56-லிருந்து 51-ஆக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சட்டமன்றத்தில்,

25-30 வயதிற்குள் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை - 7

31-40 வயதிற்குள் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை - 42

41-70 வயதிற்குள் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை - 166

71-80 வயதிற்குள் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை - 19

மேலும் தமிழக சட்டமன்றத்தில் 23 பெண் எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com