கழுத்தில் காயத்துடன் வாலிபர் பிணம்

பள்ளிபாளையத்தில் கழுத்தில் காயத்துடன் கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் காயத்துடன் வாலிபர் பிணம்
Published on

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியில் உள்ள உயர்மின் கோபுரம் அருகே சுமார் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அத்தியப்பன், பிரபாகரன், ஏட்டுகள் கண்ணன் மற்றும் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில், அவர் பெருந்துறையை சேர்ந்த வசந்தி மகன் பாலமுருகன் (வயது 30). இவருக்கு தந்தை இல்லை. இவர் நேற்று சென்னை செல்வதாக அவரது தாயாரிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பாலமுருகன் கழுத்தில் காயம் இருப்பதால், அவராக உயர்மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com