

விக்கிரவாண்டி,
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணனும் மற்றும் 20 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.