காரில் எரிந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட விவகாரம் - புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி

காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
காரில் எரிந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட விவகாரம் - புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக இன்று காலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Also Read
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி
காரில் எரிந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட விவகாரம் - புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி

அப்போது கார் முழுவதும் தீக்கிரையான நிலையில், காரின் உள்ளே 4 உடல்கள் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read
மாணவருடன் ஓரின சேர்க்கையால் போக்சோ வழக்கு: கால்பந்து வீரர் தற்கொலை
காரில் எரிந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட விவகாரம் - புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Also Read
வேர் கடலை, பிளாஸ்டிக் கவர் விலை உயர்வு... கோவில்பட்டி பேமஸ் கடலை மிட்டாய் தயாரிப்பு பாதிப்பு
காரில் எரிந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட விவகாரம் - புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி

முகமது ரபி சமீபத்தில் சென்னையில் உள்ள சொந்த வீட்டை விற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com