‘சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
‘சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் அடங்கிய சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் (Joint Action Forum on Minorities) பிரதிநிதிகள், கடந்த 6-ந்தேதி மத்திய உள்துறை மந்திரியை சந்தித்தனர்.

மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட(FCRA) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA சட்டத்தின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும், அல்லது 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான மறுஆய்வுடன் FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என மத்திய மந்திரியிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் ஏற்படுத்தக்கூடிய தொலைநோக்கு விளைவுகளை கருத்தில் கொண்டு, ஆரம்பத்தில் இருந்தே அவற்றை எதிர்த்து வரும் தி.மு.க., இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இக்குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com