முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது - அண்ணாமலை விமர்சனம்

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்று நிலையில் இருந்தது என அண்ணாமலை கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது
அண்ணாமலை விமர்சனம்
Published on

மதுரை,

முதல்-அமைச்சரின் லண்டன் பயணம் தேவையில்லாதது என அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. ஜி.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பதிலாக கோவை, மதுரை உள்ளிட்ட மாணவர்களுக்கு வந்து இங்கு இங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தொழிலை விரிவு படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என்றெல்லாம் உறுதி அளித்தாலே தொழில் மேம்படும். பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக நம் நாடு உருவெடுக்கும்.

முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது. மேலும் நாம் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறையை எடுப்போம். மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்று நிலையில் இருந்தது. பச்சை டோக்கன் வைத்திருப்பவர்கள் அங்கே அமருங்கள். சிவப்பு டோக்கன் வைத்திருப்பவர்கள் இங்கே அமருங்கள் என்று நிலை இருந்தது. மாட வீதிகள் வி.ஐ.பி.க்களின் வாகன காப்பகமாக தான் இருந்தது. ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்றெல்லாம் வாசகம் இருக்கிறது. இதை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே நமது குரல், நாம் இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் லீடரே. இது தான் உண்மையான புரட்சி.

'வீ த லீடர்ஸ்' அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. பேசிய விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். விரைவில் மகளிருக்காண பாதுகாப்பு குறித்து மகளிர் மாநாடு நமது இயக்கத்தின் சார்பில் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com