பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

கொளப்பள்ளி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே அட்டி, வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கொளப்பள்ளி பாடசாலை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இருந்து மாதேஸ்வரர் கோவில் வழியாக செல்ல வேண்டும். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், அவசர தேவைகளுக்கும் கொளப்பள்ளி பஜாருக்கு வந்து செல்கின்றனர். நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் அட்டி பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்வதால், குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com