தொழில் நல்லுறவு பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தொழில் நல்லுறவு பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் நல்லுறவு பரிசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
Published on

வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில்நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி காக்கவும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும். மேற்படி விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைத்தளத்தில் இருந்து (http://www.labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் ) அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறும், மேற்படி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் 28-ந் தேதி வரை அனுப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்று கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com