திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

இந்த நிலையில், மாநாட்டு தளத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்க, நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியும், வணக்கம் தெரிவித்த படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்றார். தொடர்ந்து திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியது.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

முன்னதாக திருவண்ணாமலைக்கு வருகை தண்டஹ் முதல்- அமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

1 More update

Next Story