அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா துவங்கியது

அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா துவங்கியது
Published on


சென்னை,

திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள், இந்த 3 விழாக்களையும் இணைத்து கருணாநிதி முப்பெரும் விழாவாக்கினார்.

அந்த வழியில் இந்த ஆண்டும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன் செப்.15-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என அவர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com