நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல்; இன்றைய சாதனை இது..! முதல்-அமைச்சர் பதிவு

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 58 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மத்திய அரசின் SSC, ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை நடந்த தேர்வில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 58 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல் என்றேன்; இன்றைய சாதனை இது! நம் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும் நிறையத் தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com