ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்

ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என்று போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம் அளித்துள்ளது.
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் மண்டலம் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் ஆத்தூர் கிளையை சார்ந்த நகர பேருந்து TN30/ND813 ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் பொது மேலாளர் தொழில்நுட்ப குழுவினருடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது அப்பஸ்சின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்ஸை இயக்கியதால்தான் எற்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டு அப்பஸ்சின் நடத்துநர் மூலமும் மேற்படி ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்கியதை உறுதி செய்யப்பட்டது. மேலும் இத்தகவல் காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது போல் பிரேக் பழுது காரணமாக விபத்து ஏற்படவில்லை என்பதனையும். இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவால் பஸ்ஸை இயக்கியதால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டு இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com