பரபரக்கும் தேர்தல்களம்: தலைவர்கள் இன்று எங்கெங்கு பிரசாரம்..?

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பரபரக்கும்  தேர்தல்களம்: தலைவர்கள் இன்று எங்கெங்கு பிரசாரம்..?
Published on

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் அமைந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

தலைவர்கள் இன்று பிரசாரம் இடங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-

மாலை 5 மணி- ஆண்டிப்பட்டி, இரவு 7 மணி- திண்டுக்கல் (மணிக்கூண்டு).

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

மேற்கு தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர்-செய்யூர் (திருக்கழுக்குன்றம்), தியாகராயநகர்- சைதாப்பேட்டை (விருகம்பாக்கம்), மதுரவாயல், பல்லாவரம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

சீர்காழி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:-விருதுநகர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:-கீழ்வேளூர், திருவாரூர்.

இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா:-

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:-

நாகை, கீழ்வேளூர், கும்பகோணம்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

திருப்பத்தூர், கே.வி.குப்பம், மதுரவாயல், அண்ணாநகர், சோழிங்கநல் லூர் (மேடவாக்கம்).

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

நாங்குநேரி.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-

துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் .

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

அவினாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, ஆர்.எஸ்.புரம், கோவை வடக்கு, ஈரோடு மேற்கு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com