'டாஸ்மாக் போன்று அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' - சபாநாயகர் அப்பாவு

அமலாகக்த்துறை எல்லை மீறி செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிகாட்டியுள்ளது என அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பது போல், அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"டாஸ்மாக் வழக்கில் அமலாகக்த்துறை எல்லை மீறி செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் சுட்டிகாட்டியுள்ளது. 10 வருடங்களாக இருக்கும் டாஸ்மாக் வழக்கை இன்று கையில் எடுத்திருப்பது போல், 10 வருடங்களாக இருக்கும் அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்.
இரண்டு வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரிக்கட்டும். அதன் பின்னர் அதானி எந்த தவறும் செய்யவில்லை என்று அவர்கள் அறிக்கை அளித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்."
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
Related Tags :
Next Story






