தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட வேண்டும்; எடப்பாடி பழனிசாமி
Published on

கோவை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கோவையில் இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட வேண்டும். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவோம். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. நிதி தரவில்லை என அவதூறு பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

தமிழ்நாட்டை சுரண்டிப்பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நடக்கும் தேர்தல் இது. அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான நிதியை பெற்றோம்.

அற்புதமான கூட்டணி அமைத்துள்ளோம். நமது கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றிக்கூட்டணியாகும்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து உழைக்கும் தலைவர் பிரதமர் மோடி. உலகத்தலைவர்கள் பாராட்டும் அளவு இந்தியாவை உயர்த்திப்பிடித்தவர் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. 2021ல் கோவையின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 200க்கும் அதிமான தொகுதிகளை கைப்பற்றும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com