தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

திமுகவினர் தவெக அரசுக்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
Published on

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் சட்டசபை கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்கும். அந்த வகையில், சட்டசபைக்கு வருகை தந்த கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அதன் பின்னர் கவர்னர் அர்லேகர் முதல் உரையை தொடங்கினார். புதிய அரசின் திட்டங்கள். நோக்கங்கள் அந்த உரையில் இடம்பெற்றன.

எதிர்க்கட்சியான திமுகவினர் தவெக அரசுக்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் சட்டசபை வளாகம் முன்பு பல்வேறு பதாகைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com