திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலினுக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் - இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை.

உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும். ஆனால் மு.க.ஸ்டாலின்-ன் கடந்த 5 ஆண்டு கால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? தமிழக மக்களே - உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…

உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா? ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று “இரட்டை இலை” சின்னத்தில் உங்கள் வாக்கை செலுத்துவது தான்! உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி! சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்! ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ, ஜெயலலிதா எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ, அதேபோல், உங்கள் தமையனாக இருந்து அதிமுக அரசு உங்களைக் காக்கும்! இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்திய வாக்கு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com