

சென்னை,
6 மாதங்களில் தவெக அரசு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வுதான் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மறைமலை நகரில் அதிமுகவின் 55ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சில கட்சிகள் ரீல்ஸ் விடுகின்றன; ரியலாக இருக்கும் கட்சி அதிமுகதான். ஏழைகளுக்காக எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக ரீல்ஸ் போடும் கட்சி அல்ல. 6 மாதங்களில் தவெக அரசு மக்களுக்கு கொடுத்த பரிசு என்னவென்றால் விலைவாசி உயர்வுதான். மின்கட்டணம்தான் உயர்ந்துள்ளது; ஆனால் மின்சாரம் சரியாக வருவது இல்லை.
விஜய் அப்படி என்ன சாதனை செய்தார்..இந்த ஆட்சியில் ஊழலே இல்லையா சொல்லுங்க..எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் தான்..திமுக ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்றால் தவெக ஆட்சியில் ரூ.10 ஆயிரம் வாங்குறாங்க.
சந்தி சிரிக்கும் நிலையில் சட்டம்-ஒழுங்கு உள்ளது; குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர் போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பு; நாகையில் ரூ.400 கோடி -மெத்தபெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரோட்டமுள்ள அதிமுகவை பலர் உடைக்க பார்க்கின்றனர். தொட்டு கூட பார்க்க முடியாது. விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல; அவருக்கு மேல் 3 முதலமைச்சர்கள் உள்ளனர். மேடையில் பேசும்போதே மின்வெட்டு ஏற்பட்டு விடுமோ என நினைக்கும் சூழல் உள்ளது. சினிமாவை விட அதிகம் பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.