சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்

கருமத்தம்பட்டி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
Published on

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

கோவையை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 27). தொழிலாளி. இவருக்கும், கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கடந்த 14-ந் தேதி அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருகம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

போக்சோ வழக்கு

இதற்கிடையில் பாலசுப்பிரமணியம் தன்னுடன் தங்க வைத்திருப்பது சிறுமி என்று தெரிந்தவுடன், சூலூர் மகளிர் நல அலுவலருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. அவர், கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com