சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஊராட்சி மன்ற துணை தலைவர் ஒருவருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் இது குறித்த தகவல் சைல்டு லைனுக்கு கிடைத்தது. இதையடுத்து சமூக நலபாதுகாப்பு அதிகாரிகள், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு திருமணவயதான 18 வயது எட்டவில்லை என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com