மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது.
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

கரூர் தூளிப்பட்டி கே.கே. நகரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (வயது 67). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் குஞ்சம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குஞ்சம்மாள் திருடன்... திருடன்... சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து குஞ்சம்மாள் காடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, தங்கச்சங்கிலிய பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com