அரசு பஸ் டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கியது

அரசு பஸ் டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கியது.
அரசு பஸ் டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கியது
Published on

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் நேற்று இரவு ஒரு அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் அருகே சின்னாறு பகுதியில் சென்றபோது அந்த பஸ்சின் முன் பக்க வலது புற டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே உள்ள சாலைக்கு சென்று பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது எதிரே வாகனங்கள் ஏதும் வராததால் பஸ்சில் பயணம் செய்த 39 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com