புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது - சேகர்பாபு பேட்டி


புயல் பாதிப்பை அரசு திறமையோடு  எதிர்கொண்டது  - சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2024 10:20 AM IST (Updated: 1 Dec 2024 10:32 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த பருவமழைக்குள் தண்ணீர் தேங்காத சூழல் நிச்சயம் ஏற்படுத்தி தருவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

சென்னை,

பெஞ்சல்' புயல் காரணமாக சென்னையில் சூரைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவைகள் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டன. இந்தநிலையில், சுரங்கப்பாதைகள், மழைநீர் தேங்கிய பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பட்டாளத்தில் அமைச்சர் சேகர்பாபு மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் ஒருசில இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக திறனுள்ள 600 ஹெச்.பி. மின் மோட்டார்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது. மழை நின்றவுடன் ரூ.19 கோடியில் பணிகள் தொடங்கப்படும். அடுத்த பருவமழைக்குள் தண்ணீர் தேங்காத சூழல் நிச்சயம் ஏற்படுத்தி தருவோம். அரசு நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பை திறமையோடு எதிர்கொண்டதாக மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

1 More update

Next Story