தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கோட்டை விட்டுவிட்டது! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

செஞ்சி சிறுமி நிலவரம் தற்போதுவரை என்னவென்றே தெரியாமல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வானதி சீனிவாசன்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குழந்தைகள்

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் செஞ்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பதவியேற்ற நாள் முதல் தவெக அரசு சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கவில்லை, பெண்களையும் பாதுகாக்கவில்லை, அரசாணை பிறப்பித்து ரத்து செய்வது என நிர்வாகத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள், மின்வெட்டு பிரச்சினை என வரிசைக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதுகாப்பிலும் தவெக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

குழந்தைகள் பாதுகாப்பு

செஞ்சி சிறுமி நிலவரம் தற்போதுவரை என்னவென்றே தெரியாமல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தூத்துக்குடி சாத்தான்குளம் குழந்தைகளும் காணாமல் போய் பின்னர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தினத்தில் கேக் கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தும் தவெக அரசு அவர்களின் பாதுகாப்பில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதது இந்த அரசு எதைத்தான் முழுமையாக செய்திருக்கிறது என்ற கேள்வியை மக்களிடம் முன்வைத்திருக்கிறது.

மழை வெள்ள நீரில் சென்று ரீல்ஸ் போடுவதை நிறுத்தி விட்டு முதலில் மழலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com