

நாமக்கல்,
தமிழக அரசு சமீபத்தில், பத்திரப்பதிவுத்துறை பணிகளை நிர்வகிக்க புதிய இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முத்திரை தாள்கள் இல்லாமலேயே, நேரடியாக பதிவு செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வரவும், ஒட்டுமொத்த பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறி கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் ஆவண எழுத்தர்கள் அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னோடி திட்டம்
இந்நிலையில் பத்திரப்பதிவுத்துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5 இடங்களில் மட்டுமே மாதிரி பதிவு மையங்கள் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுவதாகவும், அரசு சார்பதிவாளர்களே ஆவணப் பதிவுகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
புதிய அனுபவம்
மேலும், பத்திரப்பதிவுத்துறையில் எந்த ஊழியர்களும் குறைக்கப்பட மாட்டார்கள் என்றும், பொதுமக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.