தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்

மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்
Published on

ஈரோடு,

ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com