தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அவகாசம் தர வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி

அரசியலமைப்பு சட்டத்தை மதித்து கவர்னர் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப்பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.

தனிப்பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க கவர்னர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கவர்னர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கவர்னரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com