இமானுவேல் சேகரனாரின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது: முதல்-அமைச்சர் விஜய் வீர வணக்கம்

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!
இமானுவேல் சேகரனாரின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது: முதல்-அமைச்சர் விஜய் வீர வணக்கம்
Published on: 

சென்னை,

இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.

தியாகி இமானுவேல் சேகரனார் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com