விபத்தில் காயமடைந்த ஆசிரியர் சாவு

விபத்தில் காயமடைந்த ஆசிரியர் இறந்தார்.
விபத்தில் காயமடைந்த ஆசிரியர் சாவு
Published on

கலவை

விபத்தில் காயமடைந்த ஆசிரியர் இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கலவைபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 42). கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 12-ந் தேதி கலவையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த கலவை யாதவர் தெருவை சேர்ந்த நாகராஜ் (48) என்பவர் திடீரென வலது பக்கமாக திரும்பி உள்ளார். இதனால் அவர் மீது கண்ணையன் மோதி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி ராஜலட்சுமி (30) தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த விபத்து குறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com