

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார்.
7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங் கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகி றார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை, மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திரு வாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதியில் பவனி வருகிறார்.
2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரை பல்வேறு பூஜை களும், அபிஷேகமும் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மூல வருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திரு வாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கிருந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவிலை அடைகிறார்.
6-ம் திருநாளான 15-ந் தேதி காலை யாகசாலையில் நடைபெ றும் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார்.
அதன்பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத் மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவிலுக்கு வருகிறார்கள்.
7-ம் திருநாளன 16-ந் தேதி காலை 5 மணிக்கு தெய்வானை அம்மாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பாடுகிறார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று விழாவிற்கு புறப்படுகிறார். 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சிகொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
17-ந் தேதி மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாக னத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்த ருளி வீதிஉலா வருகின்றனர். 18, 19, 20-ந் தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளு டன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 21-ந் தேதி மாலை மஞ்சள் நீராட்டுக்கு பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வந்து கோவிலை சேர்கின்றனர்.
விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் கோவில் வளா கத்தில் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.