மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி
Published on

மோகனூர்

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் போத்தாவரம், குருகொண்டா வாரிபேட்டா பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 54). இவர் மோகனூர் அருகே உள்ள தனியார் தேங்காய் குடோனில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து குளிப்பதற்காக மின் மோட்டாரை இயக்கி உள்ளார். தண்ணீர் வராததால் இரும்பு குழாயை தட்டியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜை மின்சாரம் தாக்கியது. மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திராவில் இருந்து வந்த அவரது மகன், கண்டிகட்லாசுதிர்குமார் (35) மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com