கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி
Published on

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து ராஜாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com