மது விற்றவர் சிக்கினார்

நெல்லையில் மது விற்றவர் சிக்கினார்.
மது விற்றவர் சிக்கினார்
Published on

நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ராம் தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த காசிராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 அட்டைபெட்டிகளில் மொத்தம் 108 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com